தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கங்கள்,

delhi_agra_air_pollution

புகை! புகை! புகை!

(ஹலோஆமா..இப்ப டெல்லிலதான் இருக்கேன்என்ன? இந்தியா கேட்டாநேத்துதான் அங்க போயிருந்தேபாவம்அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கலஒரே.. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா? இன்னைக்கு evening,… London போரேன். அங்கேருந்து அப்படியே Newark போரேன். அனேகமா, இந்தியா வர நாலஞ்சி நாள் ஆகும். …!)

என்ன நண்பர்களேநக்கல் மன்னன் கெளண்டமணி நினைவுக்கு வருகிறதா? இன்றைய நிலை இப்படித்தான் எங்கு நோக்கினும் புகையாக உள்ளது. என்னதான் புதிது புதிதாய் பற்பல திட்டங்களை கொண்டுவந்தாலும், எரிவதை குறைத்தால்தான் கொதிப்பது அடங்கும். எனில், எப்படி இந்த காற்று மாசுபாட்டை குறைப்பது? உலகின் சிம்ம சொப்பனமாக திகழும் காற்று மசுக்கு முக்கியமான காரணம் தானியங்கி வாகனங்களின் புகை மற்றும் தொழிலக புகை.

இவற்றுக்கான ஒரு தீர்வைத்தான் நாம் இன்றைய பதிவில் காணவிருக்கிறோம். அதுதான், MITன் கிளை நிருவனமான Gravikyன் கண்டுபிடிப்பானKaalink”.

இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்ட MIT-ன் தொடக்க நிலை நிறுவனமான Graviky வாகன புகையிலிருந்து அச்சு மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.

airInkTech

இக்கருவி, வாகனத்தின் புகைப்போக்கியில் பொருத்தப்படும். புகைப்போக்கியிலிருந்து வெளியேரும் சரியாக எரியாத துகள்களை இக்கருவி தன்னகத்தே சேமித்து வைத்துக்கொள்ளும். இதில் ஒரு Indicator-ம் உள்ளது. இது இக்கருவி நிரம்பிவிட்டதா என நமக்கு காட்டுகிறது. அடிப்படையில் இக்கருவி ஒரு வடிகட்டி ஆகும்.

பின்னர், புகைப்போக்கியிலிருந்து இக்கருவியை அகற்றி அதனுள் உள்ள மாசுத்துகள்களை நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. பின் Kaalink மிண்டும் தன் பணியை செய்ய புகைப்போக்கியில் பொருத்தப்படும். சேகரிக்கப்பட்ட மாசுத்துகள்களில் உள்ள கன உலோகங்களும் புற்றுநோயுண்டாக்கும் பொருட்களும் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு நீக்கப்படுகிறது. பிறகு, சுத்திகரிக்கப்பட்ட துகள்கள் சில வேதியல் நிகழ்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தக்கூடிய மையாக மாறுகிறது. (இந்த வேதியல் நிகழ்வுகள் () செயல்முறைகள் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.)

இக்கருவியை Graviky நிறுவனம் பெங்கலூரு மற்றும் ஹாங்காங்கில் மகிழுந்து, சுமையுந்து, இருசக்கர வாகனங்கள், மீன்பிடி படகுகள் போன்றவற்றில் சோதித்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இக்கருவியால் பொதுவானதொரு டீசல் எஞ்ஜினிலிருந்து வெளிவரும் புகையிலுள்ள 93% மாசுக்களை பிரிக்க முடியும் என்கின்றனர்.

45 நிமிட வாகன ஓட்டத்தில் பெறப்படும் புகையிலிருந்து 29.57 மி.லி அல்லது 1 அவுன்ஸ் மை தயாரிக்கலாம்.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் துணை நிறுவனரும் வடிவமைப்பாளருமான அனிரூத் சர்மா  (Anirudh Sharma) கூறுகையில்,

தற்போதைய நிலையில் இக்கருவி மற்றுமதன் தொழில்நுட்பம் பல சுற்று சோதனைகளையும் சான்றுகளையும் பெறவேண்டியுள்ளது.

இதை நாங்கள் மகிழுந்து, சுமையுந்து, சிம்னிகள், தனிநபர் வாகனங்கள், நிறுவனங்கள், அரசு சார் நிறுவனங்கள் அல்லது திட்டங்கள் என பல்வேறு இடங்களில் பயன்படுத்த ஆவலாய் உள்ளோம்…!”

இந்நிறுவனம் Kickstarter எனற பிரச்சார மற்றும் நிதி திரட்டும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொழில்நுட்பம் முன்னமே மூன்று ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. அன்மையில், இந்நிறுவனம் ஹாங்காங்கில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் மூலம் Graviky நிறுவனத்துடன் ஆசியாவின் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனமன Tiger beer கை கோர்த்துள்ளது.

oil_work_ink_art

புகயை சுத்திகரிக்க பல வழிகள் இருப்பினும், அவை பிரித்தெடுக்கும் நச்சுக்களை என்ன செய்வதென தெரியவில்லை, உடன் அவை யாவும் செலவு தருபவை. (இதனாலெயே, பல நிறுவனங்கள் அரசு, சட்டங்களை இயற்றினாலும் அதை கண்டுகொள்ளாமல் புகையை வெளியேற்றி வருகின்றன…) ஆனால், இந்நிறுவனம் புகையை வடிகட்டுவதோடு நிருத்தாமல் அதை மறுசுழற்சியும் செய்கிறது. இதனல் எரிபொருளின் கடைசி பரிமாணம் வரை பயன்படுத்த முடிகின்றது.

Graviky Hong Art Pic 2

  • கலைஞர்கள் இம்மையை பயன்படுத்தி பற்பல கலைபடைப்புகளை புரிவதுடன் சூழல் மாசுபடுவதையும் மறைமுகமாக தடுக்கலாம். ஒவ்வொரு முறை இத்தயாரிப்பை பயன்படுத்துவதும் மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்துவதற்கு சமம்.
  • தொழிலகங்களில் மசுக்களை சுத்திகரிக்க பெரிய பெரிய கருவிகளை பொருத்துவதைவிட, இதுபோன்ற கருவிகளை பொருத்துவதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடக்கும்.

இந்த மாசுத்துகள்கள் 2.5 மைக்ரோ மீட்டரை விட குறைந்த விட்டத்தை உடையவை. இவை மனித முடியில் 1/30 பங்கு விட்டத்தையே உடையதாம்…!

இந்நிறுவனம் இதுவரை 1.6 பில்லியன் மைக்ரோ கிராம் அளவு மாசுக்களை சேகரித்துள்ளதாம்… இது 1.6 டிரிலியன் லிட்டர் காற்றை சுத்திகரிப்பதற்கு சம்மாம்…!!

விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்கள் கரங்களில் தவழும் நாளை எதிர்நோக்குவோம்…!

  • உயர் பளு உலோகங்களும் நச்சுப்பொருட்களும் நீக்கப்பட்டு இந்த மை தயாரிக்கப்படுவ்தாக இந்த நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் வருமா…?
  • Kaalink கருவியை விற்பனை செய்வதாலும் அதன் மூலம் பெரப்படும் மாசுத்துகள்களை மையாக மாற்றி விற்பனை செய்வதாலும் இந்நிறுவனம் இலாபமடையும். ஆனால், இக்கருவியின் முலம் தங்களது புகைப்போக்கியிலிருந்து மாசுத்துகள்களை வடிகட்டித்தரும் வாகன, நிறுவன உரிமையாளர்களுக்கு ஏதேனும் இலாபம் உண்டா…? Graviky நிறுவனம் குறிப்பிட்ட தொகையை செலுத்தி இந்த மாசுக்களை பெற்றுக்கொள்ளுமா…?
  • இந்த தொழில்நுட்பத்தை அரசு எவ்வகையில் அணுகும்…? மற்றைய கண்டுபிடிப்புகளைப்போல் இதையும் கண்டுகொள்ளாதா அரசு…?

இதுபோல் பல கேள்விகள் தொங்கலாக இருக்கின்றன… காலம் பதில் சொல்லும்… இதுபோன்ற தொழில்நுட்பங்களை ஆதரிப்போம்… பயன்படுத்துவோம்…

தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறோம்….
பிடித்து இருப்பின் ஊக்குவிக்கவும்…
பகிரவும்…

நன்றி

உசாத்துணை:

=> https://www.kickstarter.com/projects/1295587226/air-ink-the-worlds-first-ink-made-out-of-air-pollu 

=> www.air-ink.com/

=> http://www.graviky.com/air-ink.html

=> https://en.wikipedia.org/wiki/Air_Ink

img:
=>  http://www.graviky.com/

=> https://pixabay.com/

Advertisements