தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்…

“எதிர்துகளின் மையில் கற்கள்”  – இது ஒரு தொடர் பதிவு ஆகும். இதன் முந்தைய  பகுதிகளை  பார்க்கவில்லை எனில் பார்த்து விடுங்கள்…

 

மையில் கல் : 16 – “18-09-2002

ATHENA மற்றும் ATRAP, குளிர்ந்த நிலையில் உள்ள எதிர் பருப்பொருளை உருவாக்கின

(18-09-2002)

2002ல் ATHENA (Advanced Telescope for High Energy Astrophysics) மற்றும் ATRAP (Antihydrogen TRAP)” ஆகிய இரு ஆய்வுகள் மூலம் ஆயிரக்கணக்கான எதிரணுக்களை (Anti-Atoms) குளிர்ந்த நிலையில் உருவாக்கின. குளிர்ந்த நிலை என்றால் அணுக்கள் மெதுவாக இயங்குகின்றன என்று பொருள். இவை இவ்வாறு மெதுவாக இயங்குவதால், இவற்றை ஆராய நமக்கு கூடுதல் நேரம் கிடைக்கிறது.

இந்த ஆய்வில், குளிர்ந்த நிலையில் உள்ள பாசிட்ரானும், எதிர்புரோட்டானும் இணைந்து எதிர் ஐதரசனை (Hydrogen) உருவாக்கும். இது ஒரு சிறப்பான சிறையில் (Specially designed trap) பாதுகாக்கப்படுகிறது.

எதிர் ஐதரசன் ஒரு மின்னூட்ட நடுநிலை (Electrically neutral) தன்மையைப் பெற்ற பிறகு சிறையிலிருந்து (trap) வெளியேறி பருப்பொருளுடன் தொடர்புகொண்டு நிர்மூலமாகிறது (Annihilated).

ATRAP இன்னும் CERN – ல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், ATHENA இப்பொழுது பயன்பாட்டில் இல்லை.


மையில் கல் : 17 – “05-06-2011

எதிரணுக்களை 1000 வினாடிகள் ALPHA சோதனையின் மூலம் சிறைபடுத்தப்பட்டது

(05-06-2011)

சூன் 05, 2011 அன்று ALPHA (Anti-hydrogen Laser PHysics Apparatus)” சோதனையின் மூலம் எதிரணுக்களை (எதிர் ஐதரசன்) 16 நிமிடங்கள் நிர்மூலமாகாமல் பாதுகாக்க முடிந்தது. இதனால், மேலும் தெளிவாக எதிர்ஐதரசனை பற்றி ஆராய முடிந்தது.

எதிர்ஐதரசனை சிறைபிடித்து அதன் ஒருங்கொளி (LASER) மற்றும் நுண்ணொலி (Microwave) நிறமாலையினை ஆராய்வதன் மூலம் அதன் பண்புகள் குறித்து மேலும் பல புரிதல்களை அடையாலாம். அத்துடன், ஐதரசனின் நிறமாலையினையும் ஒப்பிட்டு, எதிர்ஐதரசனுக்கும் ஐதரசனுக்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியலாம். இது பருப்பொருள் மற்றும் எதிர் பருப்பொருள் ஆகியவற்றின் வேறுபாடுகளை அறிய பயன்படலாம்.

ALPHA TRAP – ன் செயல்பாட்டை விளக்கும் காணொளி

ALPHA இதுவரை 300 எதிரணுக்களை ஆராய்ந்துள்ளது.

மையில் கல் : 18 – “28-07-2011

பில்லியனில் ஒரு பங்கு துல்லியத்துடன் எதிர்துகளின் நிறையை கணக்கிட்டது ASACUSA

(28-07-2011)

asacusa
ASACUSA

பில்லியனில் ஒரு பங்கு துல்லியமாக எதிர்புடோட்டானின் நிறையை அளந்துவிடதாக சூலை 28, 2011ல் இயற்கை (Nature magazine)  என்ற அறிவியல் இதழில் CERN அறிவித்தது. இதனை நிகழ்த்தியது சப்பானோயூரோப்பிய (Japanese-European) ஆய்வான ASACUSA (Atomic Spectroscopy And Collisions Using Slow Antiprotons) ஆகும்.

இயற்கைக்கு சமநிலை பிடிக்கும், நடுநிலை (neutral) பிடிக்கும். அப்படி இருக்கையில், நமது பிரபஞ்சத்தில் மட்டும் ஏன் வெறும் பருப்பொருள் மட்டுமே நிறைந்துள்ளது. ஏன், அதனை ஈடுசெய்யும் பொருட்டு எதிர்பருப்பொருள் காணப்படுவதில்லை…?! என்ற ஐயம் நிலவி வருகிறது

எதிர்புடோட்டான் போன்ற எதிர் துகளின் நிறையை துள்ளியமாக கணக்கிடுவதன் மூலம் இந்த ஐயத்திற்கு விடை கிடைக்கலாம்

எப்படி துல்லியமாக கணக்கிடுவது நிறையை….?

2006 – ல் எதிர்புடோட்டான்களை எள்ளிய (He-Helium) அணுக்களுக்கு மத்தியில் சிறையிடப்படுகிறது (trapped). இப்போது, ஒரு ஒருங்கொளி (laser) கற்றையை பயன்படுத்தி எதிர்புடோட்டான் கிளர்ச்சி அடைய செய்யப்படுகிறது. எதிர்புடோட்டான் குவாண்டம் பெயர்வு அடையும் வரை ஒருங்கொளி கற்றையின் அதிர்வெண்ணை மாற்றுகின்றனர். பிறகு அந்த அதிர்வெண்ணை கொண்டு எதிர்புடோட்டானின் நிறையை கணக்கிடலாம்.

ஆனால், இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது…! ஒருங்கொளியின் கற்றையால் எதிர்புடோட்டானுக்கு அருகிலுள்ள எள்ளிய (Helium) அணுக்கள் நடுக்கமுற்று ஒருங்கொளியின் அதிர்வெண்ணில் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பி விடுகின்றன. எனவே, நிறையை கணக்கிடுவதில் துல்லியத்தன்மை குறைகிறது. இதனை முறியடிக்க, நமது ASACUSA குழு ஒரு திட்டத்தை தீட்டினாங்கஅது என்னவென்றால்,….

2011 – ல், ஒன்றுக்கு இரண்டு ஒருங்கொளி கற்றைகளை பயன்படுத்துவதுதான் அந்த திட்டம்…!

(ஒரு கற்றைக்கே பாதி எள்ளிய அணுக்கள் நடுங்கிவிட்டது. இரண்டு கற்றைகளை இவை தாங்குமா என்று தோன்றுகிறதா….? அதுதான் கிடையாது…)

இரண்டு ஒருங்கொளி கற்றைகளையும் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செலுத்தி, ஒன்று குழப்பிய குட்டையை மற்றொன்று சரிசெய்வது போல் ஆய்வை நடத்தினர். எனவே, எதிர்புடோட்டானை சுற்றியுள்ள அணுக்களின் நடுக்கம் குறைந்தது.

இந்த உத்தியை பயன்படுத்துவதன் மூலம் முன்னைய சோதனையினை விட இம்முறை நான்கு மடங்கு அதிக துல்லியத்தன்மை கிடைத்தது.


இந்த பதிவுடன் “எதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள்” என்ற தொடர் CERN  தளத்தின்  கணக்குப்படி முடிவடைகிறது.

இதன்  முந்தைய பதிவுகளுக்கான தொடர்பு

இந்த தொடரின் ஆங்கில வடிவத்தை cern – ன் வலைதளத்தில் காணலாம் :

http://timeline.web.cern.ch/timelines/the-story-of-antimatter/overlay

தங்களின் கருத்துக்களை ஆவளுடன் எதிர்நோக்குகிறோம்.

நன்றி

 

உசாத்துணை:

=> CERN – story of antimatter

 http://timeline.web.cern.ch/timelines/the-story-of-antimatter/overlay

படங்கள்:

=> https://home.cern/about/experiments

=> https://search.creativecommons.org/

=> https://commons.wikimedia.org/wiki/Category:Images

=> https://pixabay.com/

Advertisements